Categories
உலக செய்திகள்

வானில் கோளாறான விமானம்….. தரையில் விழுந்து சிதறியது…. திக்..திக் காட்சிகள் வெளியாகின …!!

நைஜீரியாவில் விமானம் ஒன்று தரையில் மோதி தீப்பற்றி எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அபுஜா விமான நிலையத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி எரிந்து சாம்பலாகி பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹதி சிரிக்கா இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, மின்னாவுக்கு செல்லும் கிங் ஏர் 350 என்ற ராணுவ விமானத்தின்  எஞ்சின் கோளாறால் அபூஜா விமான நிலையத்தின் ஓடு பாதையில் விழுந்து பயங்கர விபத்தாகியுள்ளது.

மேலும் அவர் இது பயங்கரமான விபத்து, நாம் அமைதியாக இருக்க வேண்டும். விபத்துக்கு உள்ளானவர்களுக்காக  நாம் பிரார்த்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்து விட்டதாக கூறப்படுகிறது .எனினும் அதில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை.

Categories

Tech |