Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வானில் தோன்றிய வெளிச்சம்….. விஞ்ஞானி அளித்த தகவல்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

வானில் தெரிந்த செயற்கைக்கோள் வெளிச்சத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆனந்தகிரி பகுதியில் வசிக்கும் பாலா என்பவர் தனது நண்பர்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது காலை 5.59 மணி அளவில் வானில் மிகப்பெரிய வெளிச்சம் தோன்றி மறைந்தது. இதனை பாலா செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் இருக்கும் வானிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி எபினேசர் கூறிய போது, வானிலை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் பி.எஸ்.எல்.வி-சி 52 ராக்கெட் நேற்று முன்தினம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொடைக்கானலில் இருந்து வான்வெளி பகுதியில் 500 கிலோ மீட்டர் தொலைவில் செயற்கைக்கோள் சென்றபோது அந்த வெளிச்சம் தோன்றியது. அதிகாலை நேரம் தெளிவான வானிலை நிலவியதால் இந்த வெளிச்சத்தை கொடைக்கானல் நகரின் பல்வேறு பகுதியில் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் பார்த்தனர்.

Categories

Tech |