வரும் 19ம் தேதி இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் நடக்க உள்ளது. சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது, சந்திரனின் மீது பூமியின் நிழலானது படிந்து, அதை மறைக்கும். இந்நிலையில், இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம் வரும் 18ம் தேதி இரவு தொடங்கி, 19ம் தேதி வரையில் நடக்க உள்ளது.
இந்த சந்திர கிரகணத்தை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் காணலாம் என்று நாசா தெரிவித்துள்ளது. முக்கியமாக பிர்லா கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சந்திர கிரகணத்தை பார்க்க பொதுமக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.