ஹவுத்தி, சவுதியின் மீது வான்வழி தாக்குதல் நடத்துவது அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.
சவுதி அதிகாரிகள் தலைநகர் ரியாத்தில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதால் அதன் எண்ணெய் ஏற்றுமதியை பாதுகாப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர். ஹவுத்தி மலைப்பகுதியில் ட்ரோன் ஏவியுள்ளது. சவுதியின் போர் விமானமான F-15 இந்த ட்ரோன் மீது தாக்குதல் நடத்தி அழித்துவிட்டது.
https://twitter.com/MbKS15/status/1376901175237300230
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. இதில் ட்ரோன் வானத்தில் பறந்து கொண்டிருக்கிறது. அப்போது திடீரென்று ஏவுகணை ட்ரோன் மீது தாக்குதல் நடத்தியதில் அது வெடித்து சிதறிவிட்டது. அதன் பின்பு ட்ரோன் பறந்த வானில் சவுதியின் போர் விமானம் பறக்கிறது.
ஹவுதி ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் சவூதி மீது தாக்குதல்கள் நடத்தி வருவது சமீபகாலங்களில் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. எனினும் அவை மிகக் குறைவாகவே சேதத்தை உண்டாக்குகின்றன.