Categories
உலக செய்திகள்

வான்வழி தாக்குதல்: சிரியாவில் ஐ.எஸ். தலைவர் இறப்பு…. பிரபல நாடு செய்த செயல்….!!!

சிரியாவின் வடமேற்கேயுள்ள ஜிண்டாய்ரிஸ் நகருக்கு வெளியில் அமெரிக்க நாட்டின் ஆளில்லா ஒரு விமானமானது வான் வழி தாக்குதலில் ஈடுபட்ட போது டாப் 5 ஐஎஸ். தலைவர்களில் ஒருவரான மற்றும் பயங்கரவாத குழுக்களின் தலைவரான மஹெர் அல்-அகால் கொல்லப்பட்டுள்ளார். இதேபோல் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் அல்-அகலுடன் நெருங்கிய தொடர்புடைய ஐ.எஸ். மூத்த அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இருப்பினும் இந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்களில் யாரும் கொல்லப்படவில்லை என தொடக்ககட்ட ஆய்வு தெரிவித்திருக்கிறது.

இத்தாக்குதலால் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது என அமெரிக்க மத்திய படையினரின் செய்தி தொடர்பாளர் ஜோ பக்கினோ தெரிவித்து இருக்கிறார். இதில் அல்-அகல், சிரியாவில் செயல்பட்ட பயங்கரவாத குழுவின் மூத்த தலைவராக இருந்ததுடன், ஈராக் மற்றும் சிரியா நாடுகளுக்கு வெளியேயும் ஐ.எஸ். நெட்வொர்க் அமைப்பு வளர்ச்சியடைவதற்கான தீவிரபணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவரின் இந்த படுகொலையால் சர்வதேச அளவில் திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதற்கான பயங்கரவாத அமைப்புகளின் திறனில் இடையூறு ஏற்படும் என்று அமெரிக்கபடை தெரிவித்துள்ளது.

Categories

Tech |