மதுரை மாவட்டத்திலுள்ள சில்லாம்பட்டி கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் காந்தி ராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாமணன் உருவம் பொறித்த எல்லைக்கல்லை ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது, சுமார் 2 அடி உயரமுடைய கல்லில் ஒன்றரை அடிக்கு வாமனன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. எட்டுபட்டறை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடங்களை குறிக்கும் வகையில் சுமார் 300 முதல் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த எல்லைக்கல் நடப்பட்டிருக்கலாம். நாயக்கர் காலத்தில் இது எல்லைக்கல்லாக அமைக்கப்பட்டிருக்கலாம். அதன் அருகிலேயே அடுத்தடுத்து ஆங்கிலேயர் காலத்தில் எல்லைக்கல்லும் நடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Categories