Categories
சினிமா

“வாம்மா நீ தான் என் தங்கச்சி”…. கோவிலில் நடிகர் வடிவேல் செய்த செயல்…. பாராட்டும் ரசிகர்கள்….!!!!

தமிழ்பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து ரசிகர்கள் இருக்கின்றனர். இம்சை அரசன் 24ம் புலிகேசி திரைப்படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில ஆண்டுகளாக அவர் படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது சுராஜ் இயக்கிவரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் எனும் படம் வாயிலாக வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இந்த நிலையில் ஈரோடு சத்தியமங்கலம் அருகில் பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலுக்கு நடிகர் வடிவேலு நேற்று மாலை சென்றார்.

இக்கோவிலுக்கு வடிவேலு வந்த தகவல் அறிந்ததும், பக்தர்கள் அவரை சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது அங்கு கோயிலில் துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் ஒருவர் தயங்கிபடி வடிவேலுவின் காலில் விழுந்து வணங்கினார். உடனடியாக அப்பெண்ணை தூக்கிவிட்டதுடன், நன்றாக இருங்கள் என அவரை வடிவேலு வாழ்த்தினார். அத்துடன் அப்பெண்ணை “வாம்மா நீ தான் என் தங்கச்சி” எனக் கூறியபடி, ஆரத்தழுவி தோளில் கைபோட்டு புகைப்படம் எடுத்துவிட்டு அங்கிருந்து வடிவேலு புறப்பட்டு சென்றார். இவரின் இச்செயலை அவருடைய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |