பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இணையவாசிகள் பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் “உங்கள் நாட்டில் விளையாட்டின் நிலை மோசமாக உள்ளது” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு பில்லியன் 300 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்திய அணியை 40 லிருந்து 50 லட்சம் வரை கொண்டுள்ள நியூசிலாந்து தோற்கடித்துள்ளது என்று பதிலளித்துள்ளார். இவ்வாறு இம்ரான் கான் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
இந்தியாவின் மக்கள்தொகை 2019-ஆம் கணக்கெடுப்பின்படி 136 கோடி ஆகும். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தவறான தகவலை அளித்துள்ளார். இந்நிலையில் இணையவாசிகள் பலரும் “பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் மக்கள் தொகை குறித்து பேசுவதற்கு முன்பு சரியான தகவலை அளிக்கிறோமோ என்று யோசிக்க வேண்டும்.
இந்தியாவுக்கு எதிரான வெறுப்புகள் மட்டுமே அவர் தலை முழுவதும் உள்ளது. முதலில் பெரிய மனிதராக நடந்து கொள்ள வேண்டும்” என பதிவிட்டு வருகின்றனர். மேலும் “பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஒரு பில்லியனில் எத்தனை பூஜ்ஜியங்கள் இருக்கும் என்பது கட்டாயம் தெரியும்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு இணையவாசிகள் பலரும் தங்களது பதிவுகள் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை வறுத்தெடுத்து வருகின்றனர்.