சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதனை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதில் வனவாசி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி பேரூராட்சிகளின் வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தற்போது திறந்து வைப்பதுதான் திமுக அரசின் 8 மாத கால சாதனை. அதோடு திமுக அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. வார்த்தை ஜாலங்கள் மூலம் மக்களை முட்டாளாக்கி வருகிறது தற்போதைய ஆளும் கட்சி.அதோடு திமுக மக்களுக்கு பயன் தரும் திட்டங்கள் எதையும் இதுவரை செயல்படுத்தவில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.