மராட்டிய மாநிலத்தில் நாயின் கழுத்தில் பெரிய கல் ஒன்றைக் கட்டி அதனை தூக்கி வெள்ள நீரில் வீசிய வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மராட்டிய மாநிலம் சந்திராபூர் தாலுகாவிற்கு உட்பட்ட தகாலி கிராமம் பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று சாலையில் நடந்து சென்ற ஒருவரை கடித்துள்ளது. இதனால் கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் நாயை பிடித்து அதன் கழுத்தில் பெரிய கல்லை கட்டி உள்ளனர். பிறகு அருகே உள்ள ஆற்றுக்கு கொண்டு சென்று அந்த நாயை கல்லோடு தூக்கி வீசி உள்ளனர்.
இதையடுத்து சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆற்றிலிருந்து நாய் வேகமாக ஓடி அவர்களிடமிருந்து தப்பி சென்றது. இந்த சம்பவம் அனைத்தையும் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து வீடியோவில் இருந்த இளைஞர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர்.