Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வாயில் நுரை தள்ளியபடி துடித்த சிறுமி…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. பெரும் சோகம்…!!

விஷ பூச்சி கடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்குவளைவேடு கிராமத்தில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகாசினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அனுஷ்கா(9) என்ற மகளும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் அனுஷ்கா அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அனுஷ்கா இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வெளியே பெற்றோருடன் படுத்து தூங்கியுள்ளார்.

இதனை அடுத்து நள்ளிரவு நேரத்தில் சிறுமியை விஷ பூச்சி ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் வாயில் நுரை தள்ளியபடி துடித்து கொண்டிருந்த சிறுமியை பெற்றோர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |