Categories
தேசிய செய்திகள்

வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்த 200 பேர்… அச்சத்தில் உறைந்த மக்கள்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏலூர் என்ற பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஏலூர் என்ற பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மக்கள் 200க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தற்போது வரை அடுத்தடுத்து 200 பேர் மயங்கி விழுந்துள்ளனர். மேலும் மயங்கி விழுந்த மக்கள் வாயில் நுரை வெளியேறி வாந்தி எடுத்து வருவதால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்கான காரணம் என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை. அதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இனி அடுத்து யாருக்கு என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் மக்கள் அனைவரும் பரிதவித்து வருகிறார்கள்.

Categories

Tech |