திருமணமான 3 மாதத்தில் கொடூரமான முறையில் பெண் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பொலவகாளிபாளையம் பகுதியில் திருவேங்கடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்து(25) என்ற மகள் இருந்துள்ளார். இன்ஜினியரிங் படித்து முடித்த இந்துவுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விஷ்ணு சாரதி(27) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் சென்னையில் உள்ள ஐ.டி கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாத பாட்டியை பார்ப்பதற்காக பொலவக்காளிபாளையத்தில் இருக்கும் தந்தை வீட்டிற்கு இந்து சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் சாப்பிட்டுவிட்டு இந்து தூங்குவதற்காக அறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை தட்டியுள்ளனர். ஆனாலும் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது முகத்தை சுற்றிலும் பாலித்தீன் பையை கட்டிக்கொண்டு வாய்பகுதியில் ஒரு குழாய் சென்ற நிலையில் இந்து சடலமாக கிடந்ததை பார்த்து பெற்றோர் கதறி அழுது போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பாட்டியை பார்ப்பதற்காக இந்து வந்ததாக கூறப்படுகிறது. பலூனுக்கு காற்று பிடிக்கும் சிறிய ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட சிலிண்டர் மற்றும் பாலிதீன் பைகளை இந்து தயாராக கொண்டு வந்து பெற்றோரிடம் சொல்லிவிட்டு அறைக்க தூங்க சென்றுள்ளார்.
பின்னர் இடைவெளியின்றி முகத்தை சுற்றி பாலித்தீன் பையை கட்டிக்கொண்டு வாயில் ஹீலிம் வாயுவை செலுத்தி கொடூரமான முறையில் இந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. திருமணமான 3 மாதத்தில் கொடூரமான முறையில் இளம்பெண் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.