பெரும்பாலும் 40 வயதை கடந்தவுடன் பெரும்பாலோனோர் சந்திக்கும் பிரச்சனை வாய்வுத் தொல்லை. இப்போதெல்லாம் 10 வயது இருப்பவர்களுக்கு கூட வாய்வுத் தொல்லை வந்துவிட்டது. செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையை தருகிறது. வேலைப் பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது போன்றவை தான் வாய்வுத் தொல்லைக்கு மிக முக்கிய காரணமாகும்.
இதனை சரிசெய்ய உங்களுக்காக சில டிப்ஸ் இங்கே…
- சீரகம், ஏலக்காய், பச்சைக் கற்பூரம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் சக்கரையோடு சேர்த்து உண்டு வந்தால் வாயு தொல்லை நீங்கும்.
- இலவங்கப்பட்டை உட்கொள்வதும் வாயு பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரும். வாயு ஏற்பட்டால், இலவங்கப்பட்டை தண்ணீரில் கொதிக்க வைத்து பின்னர் குளிர்விக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த இலவங்கப்பட்டை தண்ணீர் குடிக்க வேண்டும்.
- வாயு பிரச்சினையில் பெருங்காயத்தூளும் மிகவும் நன்மை பயக்கும். ஒரு கிளாஸ் சூடான நீரில் பெருங்காயத்தூள் சேர்த்து குடித்தல் உங்கள் வாயு பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும்.
- புதினா அமில உற்பத்தியை தடுக்கிறது. வாய்வினால் அவதியுறும்போது புதினா இலைகளை மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும். புதினா எண்ணெயை வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால் வேகமாக பலன் கிடைக்கும்.
- சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும். காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், மற்றும் சுக்கு இவற்றில் தேவையான அளவு சமமாக எடுத்து இவற்றை நெய்யுடன் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால் வாயுத் தொல்லைக் குணமாகும்.
- மிளகை பொடி செய்து 50 கிராம் எடுத்து, 2 டம்ளர் நீரில் சேர்த்து 20 நிமிடங்கள் நன்றாக காய்ச்சி, அந்த நீரை வடிகட்டி, கால் டம்ளர் அளவு என மூன்று வேளை அருந்தினால் வாயுத் தொல்லை குணமாகும்.
கவனிக்க வேண்டியவைகள்
- எண்ணெய் உள்ள உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
- ஆவியில் தயாரித்த உணவு வகைகளை அதிகப்படுத்துங்கள்.
- தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள்.
- நாளொன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.
- வெற்றிலைப் பாக்கு, பான்மசாலா வேண்டாம். மது, புகைப்பழக்கம் ஆகாது. இத்தனையும் சரியாக அமைந்தால் வாயு உங்களைத் தொந்தரவு செய்யாது.