Categories
உலக செய்திகள்

வாயைப் பூட்டி உடல் எடையை குறைக்கும் கருவி… விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…!!!

உடல் எடையை குறைக்க விரும்புவோர்களுக்காக நியூஸிலாந்து விஞ்ஞானிகள் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

உடல் பருமன் என்பது தற்போது உள்ள இளைய தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. முதலில் அனைவரும் உணவகங்களில் கிடைக்கும் பாஸ்ட்புட் ஐட்டங்களை அதிகளவில் வாங்கி சாப்பிட்டுவிட்டு, உடல் எடை அதிகரித்த பிறகு உடல் எடையை குறைக்க வேண்டும் என்று மிகவும் கஷ்டப்படுகின்றனர். வொர்க் அவுட், டயட் போன்றவற்றை கடைப்பிடிக்கின்றன. இருப்பினும் சிலரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்று கருதப்படுகின்றன. அவர்களுக்காகவே பிரத்தியேகமாக நியூசிலாந்து விஞ்ஞானிகள் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்கும் வகையில் மேல்கீழ் பற்களை திறக்க முடியாமல் பூட்டி வைக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதை பொருத்தினால் 2 மீட்டர் அளவு மட்டுமே வாயை நம்மால் திறக்க முடியும். இதன்மூலம் தண்ணீர் தவிர அடிக்கடி சாப்பிடுவது தவிர்க்கப்படும். இதனைப் பயன்படுத்தியவர்கள் இரண்டு வாரங்களில் உடல் எடையை 6 கிலோ வரை குறைத்து உள்ளார்கள் என்று ஆய்வு கூறுகின்றது.

Categories

Tech |