வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனுப்பர்பாளையம் பி.ஏ.பி வாய்க்காலில் பெண்ணின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாய்காலில் உள்ள சட்டர் அருகில் கிடந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரை யாரேனும் கொலை செய்து வாய்க்காலில் வீசி சென்றார்களா அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.