Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“வாய்க்காலில் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்த வாலிபர்”…. கைது செய்த போலீசார்…!!!!!!!!

குளித்தலை சுங்ககேட் அருகே உள்ள தென்கரை வாய்க்கால் பகுதியில் 31 வயது பெண் ஒருவர் நேற்றிரவு பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வாய்க்காலில் நீந்திய  படி அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை பிடித்து தூக்கி தவறாக நடக்க முயற்சி  செய்துள்ளார். அப்போது அந்த அந்த பெண் சத்தம் போட்டு உள்ளார். இதனால் அங்கிருந்து வாலிபர்கள் வாய்க்காலுக்குள் குதித்து வாலிபரை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். அதன் பின் அந்த வாலிபரை அவர்கள் தாக்கி இருக்கின்றனர். அப்போது குளித்தலை சுங்ககேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குளித்தலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார்  இந்த சம்பவத்தை பார்த்து அந்த வாலிபரை தடுத்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவர முயற்சி செய்தனர்.

இருந்த போதிலும் அங்கு ஏராளமானோர் கூடி அந்த நபரை தாக்கிய போது போலீசாரும் சேர்ந்து தாக்கப்பட்டார். இந்த நிலையில் ஒருவழியாக அந்த வாலிபரை போலீசார் மீட்டு குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்த வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அந்த நபர் நாமக்கல் மாவட்டம் கீழப்பாளையத்தை சேர்ந்த சிவகுமார் என்பது தெரியவந்துள்ளது. இதை அடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |