வாய்க்காலில் மிதந்த சடலம் குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஏறுஞ்சாலை வாய்க்காலில் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்தது. இதனை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்துவிட்டு உடனே காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.