கார் வாய்க்காலில் மூழ்கி கிடக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள உத்தமர்சீலி அருகே இருக்கும் வாய்க்காலில் சொகுசு கார் தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த காரில் வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து விபத்து ஏற்பட்டு கார் வாய்க்காலில் இறங்கி மூழ்கியதா? என்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவில்லை.
ஆனாலும் தஞ்சையில் இருந்து கல்லணை வழியாக திருச்சி நோக்கி சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்காலில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதற்கிடையில் கார் வாய்க்காலில் மூழ்கிக் கிடக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.