செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை என்று தமிழகம் முழுவதும் பொதுமக்களும், விவசாயிகளும் மிக கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது திரு ஸ்டாலின் அவர்கள் ஒரு விவசாயிக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என கேட்டார். ஆனால் இன்றைக்கு எவ்வளவு அறிவித்திருக்கிறார்…
ஹெக்டருக்கு 20 ஆயிரம், அப்போ அன்னைக்கி பேசினது யோக்கியமான பேச்சா, இல்லை இன்றைக்கு பேசுவது யோக்கியமான பேச்சா, செய்கிறது யோக்கியமான செயலா, அது எனக்கு தெரியவில்லை. எதிர்க்கட்சியில் இருக்கும் போது வாய்க்கு வந்தபடி பேசினார் என்று எடுக்க முடியுமா புரியல. ஆகவே பாரதிய ஜனதா கட்சி நம்முடைய மாநில செயற்குழுவில் நிறைவேற்றி இருக்கின்ற தீர்மானத்தின் அடிப்படையில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும்.
அதே போல வீடுகள் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை போன்ற இடங்களில் இருக்கக்கூடியவர்கள் அவர்களுக்கு உடனடியாக 5,000 ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆனால் இதையெல்லாம் ஏன் நடக்கிறது, நீதிமன்றமே கேட்கிறது ஆறு மாதம் தண்ணில மிதக்கிறார்கள் மக்கள், அதன் பிறகு ஆறு மாசம் குடிக்க தண்ணீர் இல்லாமல் இருக்கிறார்கள் என விமர்சித்தார்.