சென்னை விரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா(29) நேற்று முன்தினம் இரவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டிலிருந்த அவர் எழுதிய பரபரப்பான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி கொண்டனர். அந்த கடிதத்தில், “நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று தீபா எழுதி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகை தீபா தற்கொலை விவாகரத்தில் காதலன் சிராஜுதீனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு அழைத்தும் வராததால் சிராஜுனுக்கும் கோயம்பேடு போலீசார் வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சம்மனை கொடுத்துள்ளனர். காரைக்குடியில் படப்பிடிப்பில் இருக்கும் சிராஜுதீன் நாளை சென்னையில் விசாரணைக்கு ஆஜராகும் படி அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.