சசிகலா தமிழகம் வர இருக்கும் நிலையில், இது அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என பலரும் கருத்து கூறி வரும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ஏற்கனவே முதலமைச்சர் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். அதிமுகவில் இணைக்க 100 சதவீதம் அளவிற்கு வாய்ப்பே இல்லை. இதை எத்தனை தடவை சொல்லுகிறது.
100 சதவீதம் வாய்ப்பில்லை வாய்ப்பில்லை வாய்ப்பில்லை என்பதை சொல்லியாச்சு. எந்த தாக்கமும் ஏற்படப் போவதில்லை. அவுங்க அமமுக ஆரம்பிச்சி அதனுடைய சக்தியை சொல்லிவிட்டார்கள். மொத்தம் 3% மட்டும்தான் வாக்கு வாங்கினார்கள். அது தான் அவர்களுடைய பலம்.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை 2021ல் அதிமுக அரசுதான் மீண்டும் தமிழ் நாட்டை ஆளும். அம்மா சொன்ன மாதிரி நூறு வருடத்திற்கு மேலே… புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சொன்னது போல…. நூறு வருஷத்துக்கு மேல கட்சியும், ஆட்சியும் ஆளும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.