Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாய்ப்புண் பிரச்சனை இருப்பவர்களுக்கு…” உங்க வீட்ல இருக்க இந்த பொருள்கள் தான் சிறந்த மருந்து”… ட்ரை பண்ணுங்க..!!

அடிக்கடி ஏற்படும் வாய்ப்புண் தொந்தரவுகளை நீக்க நீங்கள் மருத்துவரை பார்க்க வேண்டும் என்பது கிடையாது. வீட்டிலேயே உள்ள சில பொருள்களை வைத்து உங்கள் வாய் புண்ணை எளிதில் சரிசெய்ய முடியும். அது என்ன என்பதை எளிதில் தெரிந்து கொள்வோம்.

வாய்ப்புண்மிகவும் வேதனையான ஒரு விஷயம். ஏதாவது நாம் சாப்பிடும் போது கூட அந்த புண்களில் பட்டு அது வலியை கொடுக்கும். நீங்கள் உணவு சரியாக சாப்பிட முடியாது. அதிலும் காரமான உணவுகளை உங்களால் தொடவே முடியாது. அப்படி உங்களுக்கு பலவித பிரச்சினைகளை உண்டாக்கக்கூடிய இந்த வாய்ப்புண்ணை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதில் சரிசெய்ய முடியும். அது என்ன என்பதை இதில் தெரிந்து கொள்வோம்.

பொருள்கள்:

முதலில் தேன், தேன் ஒரு மிகச்சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டது. வாய்ப்புண்களை குணமாக்குவதில் மிகச்சிறந்தது. இதில் ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து உங்கள் வாயை சுற்றி இருக்கும் புண்களில் தடவி வாருங்கள். ஒரு நாளைக்கு 3 முதல் 4 தடவை தடவுங்கள் விரைவில் குணமாகும்.

தேங்காய்எண்ணெய், தேங்காய் எண்ணெயில் ஆன்டிவைரஸ் பண்புகள் காணப்படுகிறது. இது உங்க வாய்ப்புண்ணால் ஏற்படும் வலியை குறைக்கும். ஒரு நாளைக்கு பல தடவை தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துங்கள். மேலும் அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்ட இடங்களில் அப்ளை செய்யுங்கள் நல்ல பலன்கிடைக்கும்.

கற்றாழை எப்போதுமே நல்ல குளிர்ச்சி தன்மையை கொண்டது. வாயை சுற்றி இருக்கும் புண்களின் வலியை குறைக்க உதவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வாருங்கள். வாய்ப்புண் குணமாகும்.

துளசி வாய்ப்புண்களை குணப்படுத்த பெரிதும் பயன்படுகிறது. துளசி இலையைப் வாயில் போட்டு மென்று  பின்னர் வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவுங்கள். உங்கள் வாய்ப்புண் குணமாகும்.

உப்பு கலந்த நீர் நீங்கள் உங்கள் வாயை உப்பு கலந்த நீரால் கொப்பளித்து வாருங்கள். அப்படி செய்யும்போது வாய் புண் குணமடையும். பாக்டீரியாக்களை குறைகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால் போதும்

டூத் பேஸ்ட் வாய்ப்புண்ணால் ஏற்படும் பாக்டீரியாக்களை குறைகிறது. டூத் பேஸ்ட் எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் அப்ளை செய்யுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறை செய்தாலே வாய்ப்புண் குணமாகும்.

பூண்டில் இயற்கையாகவே ஆன்டி மைக்ரோபியல் தன்மை காணப்படுகிறது. இது வாய்ப் புண்களை விரைவில் குணமாக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை என பூண்டு பற்களை எடுத்து வாய்ப்புண் பகுதியில் தடவி வாருங்கள்.

Categories

Tech |