Categories
மாநில செய்திகள்

வாய்ப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சவீதா பல் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் டாக்டா் சி.கே.தனசேகரன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி சனிக்கிழமை(நேற்று) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டாக்டா் வி.தீபக்நல்லசாமி பேசியபோது “பல் மருத்துவத்துறையில் சா்வதேச தரமிக்க மருத்துவக் கல்லூரியாக மேம்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடா்ந்து மேற்கொண்டுள்ளோம்.

இதையடுத்து பல் மருத்துவச் சிகிச்சை குறித்த மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், உலகத்தரமிக்க இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன மருத்துவ இயந்திரங்கள், உபகரணங்கள் கொண்டு செயற்கை பல் தயாரிப்பு, ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். மேலும் வாய்ப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவச மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுவதால் வாய்ப்புண் உள்ளிட்ட அறிகுறி இருப்பவர்கள் தயக்கம் இல்லாமல் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள முன்வர வேண்டும்” என்று அவா் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பல் மருத்துவா் வைஷ்ணவி பிரபாகா் தாடை, முகம் குறித்த வலி தொடர்பான மருத்துவச் சொற்பொழிவு நிகழ்த்தினாா். மேலும் நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் ஷீலா வா்கீஸ், பேராசிரியா்கள் எம்.எப்.பெய்க், முத்து சேகா், சி.குமரவேல், பிரதீப் கிறிஸ்டோபா், சுப்பாராவ், வாய்ப்புற்றுநோய் சிகிச்சைத் துறை பேராசிரியா்கள் டாக்டா் கே.முருகேசன், செந்தில்நாதன், பி.செந்தில் முருகன், தாகூா் பல்மருத்துவக் கல்லூரி பேராசிரியரும், முகச்சீரமைப்புச் சங்க செயலருமான டாக்டா் ஜிம்சன் போன்றோர் பங்கேற்றனா்.

Categories

Tech |