அதிமுகவில் ஸ்லீப்பர் செல் கிடையாது, ஆனால் சில எட்டப்பர்கள் உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், யார் நினைத்தாலும் அதிமுகவின் ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது என்று கூறினார். சசிகலாவின் வருகையால் டி.டி.வி தினகரனுக்கு தான் பதற்றம் எனவும், அதிமுகவுக்கு பதற்றம் இல்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று குறிப்பிட்ட அவர்,திமுகவின் பி-டீம் தான் சசிகலா, டிடிவி தினகரன் எனக் குற்றம் சாட்டினார். மேலும், கட்சி ஒற்றுமையாக போய் கொண்டு இருக்கின்றது. கணக்கு வழக்கு, கருப்பு பணம் என்ன ஆச்சுன்னு தினகரனிடம் கேட்பாங்க. அதனால் அவரு தான் பதற்றமாக இருக்கின்றார்.