தளபதி 66 படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பூஜா ஹெக்டே.
விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக இன்று பீஸ்ட் திரைப்படமானது ரிலீசாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு அடுத்ததாக விஜய் தளபதி 66 படத்தில் நடித்து வருகின்றார். அண்மையில் படத்திற்கான பூஜை போடப்பட்டது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். இவர் விஜய்யின் தீவிர ரசிகையாம். படப்பிடிப்பின் பூஜையில் விஜய்யை பார்த்ததும் அவருக்கு திருஷ்டி எடுத்தார் ராஷ்மிகா மந்தனா. அந்தப் புகைப்படமானது இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் தளபதி66 திரைப்படத்தில் முதலில் பூஜா ஹெக்டே வைத்தான் ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார்களாம். ஆனால் அவரால் நடக்க முடியாததால் ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். இந்நிலையில் தளபதி 66 படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு பேட்டியில் கூறியுள்ளதாவது, முதலில் படத்திற்கு பூஜா ஹெக்டே வைத்தான் ஹீரோயினாக நடிக்க தேர்வு செய்து இருந்தோம். ஆனால் அவர் ரஜினியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை என கூறிவிட்டார். அதே பேட்டியில் பூஜா ஹெக்டே கூறியுள்ளதாவது, தளபதி 66 படம் குறித்து என்னிடம் பேசிய பொழுது டேட்ஸ் பிரச்சனையால் என்னால் அந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள முடியவில்லை என்று கூறினார்.