Categories
தேசிய செய்திகள்

வாய் நீளமான இளம்பெண்… தினமும் குவியும் லட்சக்கணக்கான பணம்… வியப்பை ஏற்படுத்திய வீடியோ…!!!

உலகில் மிகப்பெரிய வாய்க் கொண்ட இளம்பெண் ஒருவர் டிக் டாக் மூலமாக நல்ல பணம் சம்பாதித்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தா ராம்ஸ்டெல் என்ற 30 வயது பெண் ஒருவர் மிகவும் அசாதாரண அம்சத்திற்காக டிக்டாக்கில் மிகவும் பிரபலம் அடைந்தவர். அவர் உலகிலேயே மிகப்பெரிய பாய் கொண்டவர். அவரை டிக்டாக்கில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள். அவர் தனது வாய் தற்போதைய கின்னஸ் உலக சாதனை அளவு 3.75 அங்குலத்திற்கு மேல் 4 அங்குலம் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். அவர் பகிர்ந்துள்ள ஆன்லைன் வீடியோ ஒன்றில், தனது வாய்க்குள் ஒரு முழு சாண்ட்விச்சை வைத்திருப்பது போன்று காட்டியுள்ளார்.

மேலும் ஒரு ஆப்பில் முழுவதையும் அவர் வாய்க்குள் வைத்து கடித்தான். அவர் வாயின் நீளத்தை அளவிடுவதற்கு ஒரு டேப்பை பயன்படுத்தியுள்ளார். அவர் தற்போது விற்பனை பிரதிநிதியாக இருக்கிறார். தனது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு டிக் டாக் கணக்கை தொடங்கி, மூன்று மாதங்களில் 8 லட்சம் பாலோவர்சை பெற்றுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “நான் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் டிக் டாக் மூலம் பிரபலம் அடைய தொடங்கினேன்.

அதில் நிறைய வேடிக்கையான முக வீடியோக்கள், நகைச்சுவைகள் மற்றும் பாடும் வீடியோக்களை உருவாக்குவேன். என்னுடைய வீடியோக்கள் அனைத்தும் வைரலாகும். எனது வீடியோக்களில் இருந்து நல்ல பணம் சம்பாதிக்கிறேன். சில சிறந்த வீடியோக்களை ஐந்து கோடிக்கும் அதிகமான மக்கள் பார்வையிடுகிறார்கள” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |