Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாய் பேச முடியாத பெண்ணிடம் அத்துமீறல்…. சமையலரின் தகாத செயல்…. கைது செய்த போலீஸ்….!!

மாற்றுத்திறனாளி பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியில் 38 வயதான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மஞ்சகுட்டை அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் சமையளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் மணிகண்டன் அப்பகுதியிலுள்ள வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். அப்போது  அந்தப் பெண் சத்தம் போடவே மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .

இந்த சம்பவம் குறித்து பனமரத்துப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து  மாற்றுத்திறனாளி பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |