நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த முன்னாள் காவலர் தேஜ்பகதூர் போட்டுயிட்டார். ஆனால் இவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தனது வேட்பு மனு சட்டவிரோதமாக நிராகரிக்கப்பட்டதாக கூறி தேஜ்பகதூர் தொடர்ந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தேஜ்பகதூர் தாக்கல் செய்த மனுவில் பாரதிய ஜனதா கட்சியின் அழுத்தம் காரணமாக தேர்தல் அதிகாரி தனது வேட்பு மனுவை நிராகரித்தாக குற்றம் சாட்டுகிறார். இந்த வழக்கில் இன்று விசாரணை நிறைவடைந்து தீர்ப்பினை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.