Categories
தேசிய செய்திகள்

வாரத்தில் ஒருநாள் மட்டும்…. குடும்பத்தோடு உக்காருங்க…. கதை சொல்லி மகிழுங்க… மோடி வேண்டுகோள் …!!

தமிழகத்தின் வில்லுப்பாட்டு கலை பற்றி மன்கிபாத் எனும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலமாக ”மனதின் குரல்” என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் பல்வேறு மக்கள் செய்துவருபவர்கள், சேவை பணிகள், தொண்டுகள் செய்து வருவதை சுட்டிக்காட்டியும், அவர்களை பாராட்டியும் பல்வேறு ஆலோசனைகளை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வழங்கி வருகிறது.

அந்த வகையில் இன்றும் நடைபெற்ற மங்கிபத் எனும்  வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அதில், தமிழகத்தின் வில்லுப்பாட்டு கலை பற்றி பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.  தமிழகத்தின் வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பாரம்பரியம் சிறப்பானது. தமிழகத்தைச் சேர்ந்த வித்யா என்பவர் புராணங்களை கதையாக கூறுவதை செய்து வருகிறார்.

கதை சொல்வது என்பது மிக அற்புதமான ஒரு கலை. பஞ்சதந்திர கதைகள் போன்றவை இந்தியாவின் சிறப்பான பாரம்பரியத்தை உணர்த்துகிறது. ஒவ்வொரு குடும்பமும் வாரத்தில் ஒருநாள் ஒன்றாக அமர்ந்து குழந்தைகளுக்கு கதை சொல்லலாம். சுதந்திர போராட்டத்தில் இந்தியா சந்தித்த பிரச்சனைகளை கதையின் மூலம் எடுத்துரைக்க வேண்டும் என மோடி தெரிவித்தார்.

Categories

Tech |