Categories
லைப் ஸ்டைல்

வாரத்தில் ஒருநாள் வல்லாரைக் கீரை சாப்பிடுங்க… எந்த நோயுமே வராது… பல நோய்களுக்கு அருமருந்து…!!!

உடலில் உள்ள பலவிதமான நோய்களுக்கு அருமருந்தாக அமையும் வல்லாரை நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன.

அதன்படி வல்லாரையில் பல அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வல்லாரை ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லில் உள்ள கரையை போக்கி ஈறுகளை பலப்படுத்தும். இது கண் எரிச்சல் கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றை போக்கி கண் நரம்புகளுக்கு நன்மை அளிக்கும். காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்து. வல்லாரை பொடியை பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்கு முன் குடித்தால் வயிற்றுப் பூச்சிகள் அழியும்.

வல்லாரையை சட்னியாக அரைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளைச் சோர்வை நீக்கி ஞாபக மறதியை குணமாக்கும். இந்த சட்னியில் புளியை சேர்ப்பது. மேலும் மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப்புண் மற்றும் குடல் புண் ஆற்றுகிறது. வல்லாரை இலையை முறைப்படி எண்ணையாக்கி தினமும் தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். உடல் எரிச்சல் நீங்கும்.

Categories

Tech |