Categories
உலக செய்திகள்

“வாரத்தில் 2 முறை மட்டுமே குளிக்க வேண்டும்”… இருட்டு அறையில் தான் இருக்க வேண்டும்… தந்தையின் கொடூர செயல்..!!

பிரித்தானிய நாட்டில் மூன்று பிள்ளைகளுக்கு தந்தையானவர் தன் குடும்பத்தினரை வாரத்தில் இரண்டு முறை மட்டுமே குளிக்க வேண்டும் என்றும் சாப்பிடும் நேரத்தை தவிர மற்ற நேரம் இருண்ட வீடு தான் இருக்க வேண்டும் என்று கொடுமைப்படுத்தி உள்ளார்.

இந்த  கொடுமைக்கார தந்தை 56 வயதுடைய ரச்சித் கத்லா  இன்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். இவர் தேர்வு செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமே குடும்பத்தினர் பார்க்க வேண்டும் என்றும், வேறு விளம்பர நிகழ்ச்சிகளை பார்க்க அனுமதிக்க மாட்டார் . அது மட்டுமல்லாது வாரத்தில் இரண்டு நாட்கள் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் ஒரு மணி நேரம் மட்டும் வெந்நீரை பயன்படுத்த வேண்டும் மற்றும்  குடும்பத்தினர் சாப்பிடும் நேரத்தில் மட்டும் மின் விளக்குகள் பயன்படுத்த வேண்டும் .

மற்ற நேரங்களில் இருண்ட வீட்டில்தான் இருக்கவேண்டுமென்று ,குடும்பத்தினரை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இவரின் இந்த செயல்களை தாங்கமுடியாமல் இவரின் மூத்த மகனான கரீம்  வீட்டைவிட்டு 2011 ஆம் ஆண்டில் வெளியேறினார் . 27 வயதுடைய கரீம்  தன் தந்தை ஏற்படுத்திய கொடுமைகளை நீதிமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன் தனக்குத் திருமணமானதையும் , தனக்கு ஒரு குழந்தை இருப்பதையும் தன் தந்தைக்குத் தெரியாமல் ரகசியமாக வைத்துள்ளார். இவ்வாறு குடும்பத்தினரை கொடுமைப்படுத்திய கத்லா மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Categories

Tech |