Categories
மாநில செய்திகள்

வாரந்தோறும் தடுப்பூசி முகாம்…. தலைமை செயலாளர் இறையன்பு….!!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக இன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இந்த மையங்கள் மூலமாக 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் பணிகளுக்கு வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், கல்வித்துறை,உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் உறுதுணையாக உள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும்.

கொரோனா மூன்றாவது அலையை தடுப்பதற்காகவும், கொரோனா நோயிலிருந்து விடுபடவும் இந்தத் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது . இந்நிலையில் இன்று நடைபெறுவது போல வாரம்தோறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

 

 

Categories

Tech |