Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

வாரம் ஒரு முறை… “கட்டாயம் தலைக்கு எண்ணெய் வச்சு குளிங்க”… ரொம்ப நல்லது..!!

உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்க கூடிய எண்ணெய் குளியலை நாம் மறந்து விட்டோம் என்று தான் கூறவேண்டும்.

பல தலைமுறைகளாக எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டு வருகிறது. தலைக்கும், உடலுக்கும் எண்ணெய் தேய்த்து வாரத்திற்கு இருமுறை அல்லது ஒரு முறை குளித்து வந்தால் ஆரோக்கியமாக இருப்பார்கள். இது நம் முன்னோர்கள் பின்பற்றிய பழக்கம். ஆனால் தற்போது வருடத்திற்கு ஒருமுறை தீபாவளி மட்டுமே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம். நல்லெண்ணையை காய்ச்சி அதனுடன் சின்ன வெங்காயம், சீரகம் மற்றும் மிளகு இலை இவைகளை இடித்து ஒன்றாக சேர்த்து கொதிக்க வைத்து பின்னர்  ஆறிய பிறகு ஒரு கையளவு எடுத்து உச்சந்தலையில் சூடு பறக்க தேய்த்து எண்ணெய் குளியல் செய்யும்போது உடல் நல்ல புத்துணர்ச்சி அடையும். பல நன்மைகளும் வந்து சேரும்.

நாம் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு அறிவியல் ரீதியாகவும் பல தொடர்பு இருக்கின்றது. உடல் சூடு, உடல் வலி, தசை வலி, சோர்வுக்கு உடனடி நிவாரணம் தரக்கூடிய எண்ணெய் குளியலை வாரம் ஒரு முறை எண்ணையை  தேய்த்து அந்த உடலோடு வெயிலில் நின்றால் சூரியனில் இருக்கும் செரோடோனின் ஹார்மோன் எளிதில் நமக்கு கிடைக்கும். இதனால் நமது உடல் புத்துணர்வு அடைந்து சுறுசுறுப்பாகி விடும்.

Categories

Tech |