Categories
தேசிய செய்திகள்

வாராந்திர ரயில் சேவை மார்ச் 26 ஆம் தேதி வரை நீட்டிப்பு…. ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துகளுடன் ஒப்பிடுகையில் ரயில் போக்குவரத்தில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். இதனாலையே தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகம் அவ்வபோது பல வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. அரசிற்கு அதிக வருவாயை வழங்கும் ரயில்வே துறையின் சேவைகள் அனைத்தும் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ராமேஸ்வரம் மற்றும் ஹுப்லி வாராந்திர ரயில் சேவை குறித்த அறிவிப்பை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஹுப்ளி -ராமேஸ்வரம் ரயில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு இராமேஸ்வரம் சென்றடையும். பின்னர் ராமேஸ்வரம் – ஹூப்ளி ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.25 மணிக்கு ஹுப்ளி சென்றடையும். இதற்கு முன்பு இந்த ரயில் சேவை ஜனவரி எட்டாம் தேதி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மார்ச் 26 ஆம் தேதி வரை ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |