Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வாரிசுச்சான்று வேண்டுமா?… ரூ 12,000 லஞ்சம் கொடு…கையும் களவுமாக மாட்டிய வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி கைது… லஞ்ச ஒழிப்பு துறையினர் நடவடிக்கை…!!!

வாரிசு சான்று வழங்க ரூ 12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்துள்ள நொச்சியம் அருகில் குமரகுடி பகுதியில் வசித்து வருபவர் இளவரசன். இவர் கல்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அப்பகுதியில் வசித்த மாணிக்கம் என்பவர் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதற்கு ரூ 12 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் சான்றிதழ் தர முடியும் என்று இளவரசனும், மண்ணச்சநல்லூர் வருவாய் ஆய்வாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்கள். இதனை அடுத்து லஞ்சம் கொடுக்க மனமில்லாத மாணிக்கம் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்ட புகார் கொடுத்துள்ளார்.

இப்புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய பணத்தை மாணிக்கத்திடம் கொடுத்து வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் ஆகியோரிடம் கொடுக்குமாறு கூறினார்கள். இதனை அடுத்து மாணிக்கம் மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தில் வைத்து வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் ஆகியோரிடம் பணத்தை கொடுக்கும் போது அங்கு பதுங்கியிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவர்கள் இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது தாலுகா அலுவலக கதவு பூட்டப்பட்டு இருந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலராக பணிபுரிந்த இளவரசன் கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பதவி கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது. இவர் பணியாற்றி மூன்று வருடங்கள் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |