உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்திருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் நாளை காலை 9.30 மணிக்கு ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதி பதவியேற்பார் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், உதயநிதி அமைச்சராவது தான் ‘புதிய திராவிட மாடல்’ என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர், நாங்கள் 25 ஆண்டுகள் அரசியல் பணி செய்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளோம். ஆனால், தற்போது வாரிசு அரசியல் நடக்கிறது. CM ஸ்டாலின் புதுச்சேரியில் பேசியது எதுவுமே சரி கிடையாது. பொம்மை ஆட்சி நடப்பதாக அவர் சொன்னது உண்மைதான். அது புதுச்சேரியில் இல்லை கர்நாடாகாவில் நடந்து கொண்டிருக்கின்றது என்றார்.