Categories
மாநில செய்திகள்

வாரிசு சான்றிதழ் பெற புதிய வழிகாட்டு நெறிமுறைகள்….. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

வாரிசுதாரர் சான்று வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து நிர்வாக ஆணையரகத்துக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், வாரிசுதாரர் சான்று பெற விரும்புவோர். வட்டாட்சியரிடம் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இறந்த நபர் எந்த இடத்தில் வசித்தாரோ அந்த வசிப்பிடத்திற்கு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வட்டாட்சியரிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும். வாரிசு சான்றிதழ் என்பது பொதுவான ஆவணம். இதனை சாதி மதம் பார்க்காமல் எந்தவித தடையும் விதிக்காமல் வழங்க வேண்டும். இந்த வாரிசு சான்றிதழை இறந்தவரின் தந்தை, இறந்தவரின் தாய் இறந்தவரின் வாரிசு இறந்தவரின் மகன்கள் அல்லது மகள்கள் ஆகியோருக்கு வழங்கலாம். அதனைத் தொடர்ந்து இறந்தவர் திருமணமாகாதவராக இருந்தால் அவரது தாய், தந்தை, சகோதரர், சகோதரிர் ஆகியோருக்கு வாரிசு சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் திருமணமாகாதவர் இறக்கும்போது சில முக்கிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். அதாவது, இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், அரசிடம் பெறப்பட்ட தாமதமான இறப்பு சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு வாங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், ஓய்வூதிய கணக்கு உத்தரவு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். அதனைப் போல இறந்தவர் திருமணமானவர் என்றால், திருமண பதிவு சான்றிதழ், கடவு சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். இதனையடுத்து வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் சிறாராக இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். இறந்தவரின் சகோதரர் அல்லது சகோதரிகளை காப்பாளராக கொண்டு விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. தத்தெடுத்துக் கொண்ட குழந்தைக்கு வாரிசு சான்றிதழ் வழங்கும் போது, சட்டபூர்வமான முறையில் தத்தெடுப்பு நடந்து உள்ளதா என்பதை வட்டாட்சியர்கள் ஆய்வு செய்திட வேண்டும். விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியே விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த விண்ணப்ப கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் தரவுகள் அனைத்தையும் ஆய்வு செய்து விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பி வைப்பார். அதன் பிறகு அடுத்த வாரத்திற்குள் வாரிசு சான்றிதழ் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |