தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய் . இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது.
இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைக்க விஜய் ஒரு பாடல் பாடியிருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. நேற்று முன்தினம் அஜித்தின் துணிவு திரையரங்க உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாங்கியதாகவும் திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விஜயின் வாரிசு திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோகத்தையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் இதற்கு செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பெயரில் பின்னால் இருந்து செயல்படுவதாக கூறப்படுகின்றது.