தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்ப செண்டிமெண்ட் கதை அம்சம் கொண்ட படத்தில் விஜய் நடித்து வருகிறார். வாரிசு படுத்தினை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது .இந்த படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது எண்ணூரில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நான் நட்சத்திரங்கள் விஜயுடன் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை குஷ்பு விஜயயுடன் வாரிசு படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியானது. அதற்கு ஏற்றார் போல் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய், பிரபு, சரத்குமாருடன் குஷ்பு இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானது. இது குறித்து குஷ்பூ விளக்கம் அளித்துள்ளார். நான் வாரிசு படத்தில் நடிக்கவில்லை என்று நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். மேலும் படபிடிப்பு தளத்தில் விஜயை சந்தித்தபோது நான் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வாரிசு படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.