தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விஜய் விளக்குகிறார். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கின்றார். இதில் நடிகர் அர்ஜுன், இந்தி நடிகர் சஞ்சய் தத், டைரக்டர் கௌதம் மேனன் போன்றோர் வில்லன்களாக நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் இன்னொரு வலிமையான நாலாவது வில்லனாக டைரக்டர் மிஸ்கின் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இது இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் திரை உலகில் முன்னணி டைரக்டராக இருக்கும் மிஸ்கின் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன் போன்ற பல்வேறு வெற்றி படங்களை கொடுத்திருக்கின்றார் சில படங்களில் நடித்தும் இருக்கின்றார். இந்த நிலையில் சவரகத்தி படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்திலும் வில்லன் வேடம் ஏற்று நடித்துள்ளார். இந்த படத்தில் எம்எல்ஏவாகவும் சிவகார்த்திகேயனுக்கு எதிரான முக்கிய வில்லனாகவும் நடிக்கின்றார்.