வாரிசு படம் வெளியாகவில்லை என்றால் போராட்டம் நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பொங்கல் அன்று தெலுங்கு படங்களைதான் வெளியிட வேண்டும் என்று தெலுங்கு திரையுலகினர் முடிவு செய்திருக்கிறார்கள். என் தம்பி விஜய் அவர்களின் படம் உரிய நேரத்தில் வெளிவர வேண்டும். அதை தடுக்க மாட்டேன் என்று அவர்கள் உறுதி கொடுத்து இருக்கிறார்கள். அப்படி வெளியிடவில்லை என்றால் போராடுவேன்.
ஆனால் அவர்கள் எப்படி சொல்லவில்லை. ஒரு தீர்மானம் போட்டுள்ளார்கள் அது செயலாக்கம் பெறவில்லை. பெறாது. அதனால் உறுதியாக விஜய் படம் வெளிவரும் உரிய நேரத்தில் வரும். உதயநிதியை குறைத்து மதிப்பிடாதீர்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார். சினிமாவுக்கு மொழி இல்லை என்று பேசியிருக்கும் சீமான் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்.