ஜெயிலர் திரைப்படத்திற்காக பார்த்து பார்த்து நடவடிக்கை எடுத்து வருகின்றார் நெல்சன் .
தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்திருக்கின்றது.
இத்திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சென்ற ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியானது. இதை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. இதில் ரஜினிகாந்த் வயதான தோற்றத்தில் கண்ணாடி அணிந்தபடி இருக்கின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பும் ஆகஸ்ட் 22-ம் தேதியே பூஜையுடன் தொடங்கியது.
இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. இந்த நிலைமை ஜெயிலர் திரைப்படத்திற்கு வரக்கூடாது என படக்குழு திட்டம் தீட்டியுள்ளது. இதனால் படப்பிடிப்பு தளத்திற்கு செல்போன் அனுமதி இல்லை என பிளான் செய்து இருக்கின்றார்களாம். இதனால் படபிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் வெளியாகாது என சொல்லப்படுகின்றது.