Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு” பட படப்பிடிப்பு…. பிரபல நடிகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்…. இணையத்தில் பகிர்ந்து புகழ்ந்த ஷாம்….!!!!!

வாரிசு பட படபிடிப்பின் போது பிரகாஷ்ராஜுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து நடிகர் சாம் புகழாரம் சூட்டியுள்ளார்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது.

இந்த நிலையில் வாரிசு திரைப்பட படப்பிடிப்பில் நடிகர் பிரகாஷ்ராஜுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகர் சாம் பகிர்ந்து உள்ளார். மேலும் அதில் அவர் கூறியுள்ளதாவது, “என்ன ஒரு பர்சனாலிட்டி பிரகாஷ் ராஜ் சார், அவர் ஒரு அற்புதமான நடிகர் மட்டுமல்ல சிறந்த மனிதர்…. லவ் யூ சார்”…. என தெரிவித்துள்ளார். இப்புகைப்படமானது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

https://www.instagram.com/p/CgWkCvvJc3Y/?utm_source=ig_embed&ig_rid=86e8f243-de36-4457-932c-46f5617cea6f

Categories

Tech |