தமிழக சட்டப்பேரவை தேர்தல் இரண்டும் இரண்டு மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன. தமிழக அரசியல் களத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மையம் என ஐந்து முறைகள் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து அரசியல் இறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் அரசியல் கட்சி தொடங்காமல் பின் வாங்கிவிட்டார். இது அரசியல் ரஜினி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் நேற்றைய தினம் நடிகர் கமல்ஹாசன் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து இருந்தார்.
இதையடுத்து தற்போது வாய்ப்பு இருக்கிறது வாருங்கள் பணியாற்றுவோம் என்று நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். தலைவர் என அழைக்கப்படும் நபர் இன்னும் அரசியலை தவறாது கவனித்துக் கொண்டிருக்கிறார் என கமல் தெரிவித்துள்ளார்.