Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வார இதழ் வெளியிட்ட வீடியோ”… அதிர்ச்சியடைந்த எஸ்.ஜே.சூர்யா…. பதறிப்போய் விளக்கம்…!!!!

எஸ் ஜே சூர்யா பேசியது குறித்து வார இதழ் ஒன்றில் வெளியானதை கண்டு அதிர்ச்சியடைந்து விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் விஜய், அஜித் உள்ளிட்டோரை வைத்து வாலி, குஷி ஆகிய படத்தை இயக்கி வெற்றி படங்களை தந்துள்ளார். இடையில் சிறிது காலம் சினிமாவில் இருந்து வெளியேறிய இவர் இறைவி திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

அதற்குப்பின் இசை, மான்ஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அண்மையில் வெளியான மாநாடு திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் மெகா ஹிட்டானது. இந்த நிலையில் தற்போது எஸ் ஜே சூர்யா சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார்.

படத்தின் புரமோஷனுக்காக அண்மையில் பேட்டியளித்த போது அவர் கூறியதை வார இதழ் ஒன்று அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த எஸ்.ஜே.சூர்யா இது குறித்து விளக்கமளித்து இருக்கின்றார். அவர் கூறியுள்ளதாவது, தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் விஜய்க்கு ஒரு ஸ்பெஷல் இடம் கொடுத்திருக்கின்றார்கள். அதேபோல சிவகார்த்திகேயனுக்கும் கொடுக்கின்றார்கள் என்றுதான் நான் சொன்னேன்” என கூறியுள்ளார். இப்படி ஒரு தலைப்பை எதிர்பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

Categories

Tech |