நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாட்களில் முழு ஊரடங்கு போன்றவை அமலில் இருக்கிறது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் டெல்லியில் வார கடைசி நாட்களில் அமலில் உள்ள ஊரடங்கை தளர்த்த கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். அதாவது கடை, வணிக வளாகத்தை திறக்கவும், 50 சதவீதம் ஊழியர்களுடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கவும் முடிவுசெய்துள்ளது. இதனால் தனது முடிவை ஆளுநருக்கு முதல்வர் கெஜ்ரிவால் அனுப்பியுள்ளார்.