Categories
தேசிய செய்திகள்

வார இறுதி ஊரடங்கு திடீர் ரத்து…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கர்நாடகாவில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கர்நாடகாவில் வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. தொழில்நுட்ப வல்லுனர்கள் கூட்டத்திற்குப் பிறகு கர்நாடக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. பெங்களூர் நகரை தவிர பிற மாவட்டங்களில் பள்ளிகளை திறக்கலாம் என்றும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 பேரை தாண்டும் பள்ளிகள் மட்டும் மூடப்படும் என்று கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |