மகாராஷ்டிரா மாநிலத்தின் வார இறுதியில் ஒரு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதற்காக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா 2வது தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி அமைச்சரவை செயலாளர் சுகாதாரத்துறை செயலாளர் அடங்கிய குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரே நாளில் 57 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் வார இறுதி நாட்களில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள்கிழமை காலை 7 மணி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மால்கள், உணவகங்கள், பாருங்கள், வழிபாட்டுத் தலங்கள், தியேட்டர்களை மூட உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.