டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு காற்றின் தரமானது மிகவும் மோசமடைந்துள்ளது. இதற்கு காரணம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் டெல்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேவைப்பட்டால் காற்று மாசுவை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த தயார் என உச்சநீதிமன்றம் ஆலோசனைப்படி நடந்து அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மக்கள் வீட்டிலிருந்தே பணியாற்றவேண்டும். சுற்றுப்புற நகரில் உள்ள விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிக்கக்கூடாது. மேலும் கட்டுமானம், தொழிற்சாலை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.